Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
தேசிய விளையாட்டு வாரத்தினை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் நடாத்திய உடற்பயிற்சி விழிப்புணர்வு நிகழ்வு - 2025.09.12
தேசிய விளையாட்டு வாரத்தினை முன்னிட்டு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட உடற்பயிற்சி விழிப்புணர்வு நிகழ்வு 2025.09.12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.00 மணிக்கு மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு. S.பார்த்திபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்ததுடன் உடற்பயிற்சி வளவாளராக ஆசிரியை திருமதி. கஜேந்தினி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் உடற்பயிற்சியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அரச சார்பற்ற நிறுவனங்களுடனான செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் - 2025
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் 2025.09.03 ஆம் திகதி புதன்கிழமையன்று மு.ப 9.30 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) வேலைத்திட்டத்திற்கிணைவான செய்ரி வாரம் (Seiri Week)
Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கிணைவாக Seiri வாரத்தினை முன்னிட்டு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிரமதான பணி 2025.09.02 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று மு.ப 8.00 மணி முதல் இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சிரமதானத்தின் போது பிரதேச செயலக வளாகம் மற்றும் பிரதேச செயலகத்திற்கு முற்புறமாகவுள்ள வீதியோரங்கள் என்பன பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க உறுப்பினர்களின் பூரண பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2025.07.29
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 2025.07.29 ஆம் திகதி செவ்வாய்கிழமை பி.ப 2.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ கந்தசாமி பிரபு அவர்களது தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேசத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.























