தொலை நோக்கு.   
               
உற்பத்தி திறன் வாய்ந்த மக்கள் சேவை.


துாரநோக்கு.

நிபுணத்துவம் கொண்ட மனிதவளப் பயன்பாட்டுடன் கூடிய பிரதேச மற்றும் கிராமமட்டத்தினுர்டனான உயர்ந்த நிருவாக முறையினூடாக சிறந்ததோர் அரசசேவையினை உறுதிப்படுத்துதல்.

 

பிரதேசம் பற்றிய தகவல்.


மண்முனை தென்மேற்கு பிரதேசசெயலக பிரிவானது மட்டக்களப்பு வாவிக்கு மேற்கு கரையோரத்தில் அமைந்துள்ளது. இப் பிரதேசசெயலகமானது மட்டக்களப்பு நகரத்திலிருந்து தென்மேற்காக 13Km தொலைவில் உள்ளது. இதனுடைய நிலப்பரப்பு அண்ணளவாக 125.1 சதுரகிலோமீற்றர். இப்பிரதேசமானது மாவட்டத்திலிருந்து 6.14% ஆகும். இப்பிரதேசசெயலக பிரிவில் வாழும் மக்கள் சனத்தொகை 27512 ஆகும். இங்கு 8304 குடும்பங்கள் 24 பிரதேசசெயலக பிரிவுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பிரிவில் மக்களுடைய பிரதான பொருளாதாரமாக விவசாயம் காணப்பதுவதுடன் மக்கள் நீர்ப்பாசன வசதிகளைக் கடுக்காமுனைக்குளம், புளுகுணாவக்குளம் மற்றும் சேவகப்பற்றுக்குளம் என்பவற்றின் மூலம் பெற்றுக்கொள்கின்றார்கள். மாகாண நீர்ப்பாசனத்தினைக்களத்தின் கீழ் இவை இருக்கின்றன. நீறுபூத்தசேனைக்குளம், குளுவினமடுக்குளம், தாந்தாமலைக்குளம் என்பனவும் நீர்ப்பாசன வசதிகளை வழங்குகின்றன.

பெரும்போகம் மற்றும் சிறுபோகங்களுக்காக 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. மீன்பிடித்தொழில், செங்கல் உற்பத்தி என்பன இங்குள்ள மக்களுடைய வாழ்வாதாரச் செயற்பாடுகளாகும். இப்பிரிவில் 05 மீனவகூட்டுறவுச்சங்கங்கள் இயங்குகின்றன.

மீன்பிடித்தொழில் செய்யும் மக்கள் சனத்தொகை 1717 பேர். இது தவிர்ந்த 128 பேர் மீனவர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகின்றார்கள். மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான பொருட்களை 147 பேர் உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பிரிவில் 3398 நிரந்தர வீடுகளும், 912 நடுத்தர நிரந்தர வீடுகளும், 3021 தற்காலிக கொட்டில்களும் இருக்கின்றன.  மண்முனை தென் மேற்கு பிரதேசசெயலகப்பிரிவில் 20 IC, II, III தரப் பாடசாலைகளும் காணப்படுகின்றன. 300 ஆசிரியர்களும் அதன் கீழ் 6103 மாணவர்களும் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவதோடு இங்கு ஆசிரியர் மாணவர் விகிதம் 20:1 ஆகும்.

இப்பிரிவில் காணப்படுகின்ற 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 57 மத வழிபாட்டுத்தலங்கள் காணப்படுவதோடு இப்பிரிவில் இந்துமதத்தைப் பின்பற்றும் மக்களே அதிகமாக காணப்படுகின்றனர். இப்பிரிவில் ஒரேயொரு வைத்தியசாலை மாத்திரம் மகிழடித்தீவு எனும் பிரதேசத்தில் அமைந்துள்ளது என்பதுடன் 5 சுகாதார மகப்பேற்றுபராமரிப்பு நிலையங்கள் அம்பிளாந்துறை, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு-தெற்கு, பனிச்சையடிமுன்மாரிமற்றும் கொல்லநுலை பிரதேசங்களில் அமையப்பெற்றுள்ளன.

Name From To
     

News & Events

14
மே2026
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது...

17
ஏப்2026
"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வத்ஸர பியவர" வேலைத்திட்டத்திற்கு அமைவாக...

குடியுரிமை சாசனம்

Scroll To Top