Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
பொலிஸ் நிலையங்கள்
பொலிஸ் நிலையம்
| பெயர்/அமைவிடம் | விலாசம் | தொலைபேசி இலக்கம் |
| கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையம் | பிரதான வீதி, கொக்கட்டிச்சோலை | 0652056936 |
உத்தியோகஸ்தர் குழு
![]() |
பெயர் | திருமதி.தெட்சணகௌரி தினேஷ், |
| தகைமை |
|
|
| பணி வரலாறு |
|
|
உதவி பிரதேச செயலாளர் |
||
![]() |
பெயர் | திரு.K.அருணண் (Acting) |
| தகைமை |
Engineer |
|
| பணி வரலாறு |
Induction Training at SLIDA SLAS cadet |
|
|
கணக்காளர் |
||
| பெயர் | திரு.S.முகிலன் | |
| தகைமை |
SLAcS |
|
| பணி வரலாறு | 2008 - 2018 Department of Irrigation. 2018 Up to now Divisional Secretariat Manmunai South West |
|
உதவிப் திட்டமிடல் பணிப்பாளர் |
||
![]() |
பெயர் | திரு.செ.பிரபாகரன் |
| தகைமை | B.Com | |
| பணி வரலாறு | Divisional Secretariat - Koraipattu Valaichenai 2015 Up to now Divisional Secretariat Manmunai South West |
|
நிர்வாக அதிகாரி |
||
![]() |
பெயர் | திரு.T.துரைராஜ் |
| தகைமை | B.A | |
| பணி வரலாறு | Divisional Secretariat - Manmunai pattru 2015 Up to now Divisional Secretariat Manmunai South West |
|
![]() |
||
கண்ணோட்டம்
தொலை நோக்கு.
உற்பத்தி திறன் வாய்ந்த மக்கள் சேவை.
துாரநோக்கு.
நிபுணத்துவம் கொண்ட மனிதவளப் பயன்பாட்டுடன் கூடிய பிரதேச மற்றும் கிராமமட்டத்தினுர்டனான உயர்ந்த நிருவாக முறையினூடாக சிறந்ததோர் அரசசேவையினை உறுதிப்படுத்துதல்.
பிரதேசம் பற்றிய தகவல்.
மண்முனை தென்மேற்கு பிரதேசசெயலக பிரிவானது மட்டக்களப்பு வாவிக்கு மேற்கு கரையோரத்தில் அமைந்துள்ளது. இப் பிரதேசசெயலகமானது மட்டக்களப்பு நகரத்திலிருந்து தென்மேற்காக 13Km தொலைவில் உள்ளது. இதனுடைய நிலப்பரப்பு அண்ணளவாக 125.1 சதுரகிலோமீற்றர். இப்பிரதேசமானது மாவட்டத்திலிருந்து 6.14% ஆகும். இப்பிரதேசசெயலக பிரிவில் வாழும் மக்கள் சனத்தொகை 27512 ஆகும். இங்கு 8304 குடும்பங்கள் 24 பிரதேசசெயலக பிரிவுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பிரிவில் மக்களுடைய பிரதான பொருளாதாரமாக விவசாயம் காணப்பதுவதுடன் மக்கள் நீர்ப்பாசன வசதிகளைக் கடுக்காமுனைக்குளம், புளுகுணாவக்குளம் மற்றும் சேவகப்பற்றுக்குளம் என்பவற்றின் மூலம் பெற்றுக்கொள்கின்றார்கள். மாகாண நீர்ப்பாசனத்தினைக்களத்தின் கீழ் இவை இருக்கின்றன. நீறுபூத்தசேனைக்குளம், குளுவினமடுக்குளம், தாந்தாமலைக்குளம் என்பனவும் நீர்ப்பாசன வசதிகளை வழங்குகின்றன.
பெரும்போகம் மற்றும் சிறுபோகங்களுக்காக 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. மீன்பிடித்தொழில், செங்கல் உற்பத்தி என்பன இங்குள்ள மக்களுடைய வாழ்வாதாரச் செயற்பாடுகளாகும். இப்பிரிவில் 05 மீனவகூட்டுறவுச்சங்கங்கள் இயங்குகின்றன.
மீன்பிடித்தொழில் செய்யும் மக்கள் சனத்தொகை 1717 பேர். இது தவிர்ந்த 128 பேர் மீனவர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகின்றார்கள். மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான பொருட்களை 147 பேர் உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பிரிவில் 3398 நிரந்தர வீடுகளும், 912 நடுத்தர நிரந்தர வீடுகளும், 3021 தற்காலிக கொட்டில்களும் இருக்கின்றன. மண்முனை தென் மேற்கு பிரதேசசெயலகப்பிரிவில் 20 IC, II, III தரப் பாடசாலைகளும் காணப்படுகின்றன. 300 ஆசிரியர்களும் அதன் கீழ் 6103 மாணவர்களும் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவதோடு இங்கு ஆசிரியர் மாணவர் விகிதம் 20:1 ஆகும்.
இப்பிரிவில் காணப்படுகின்ற 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 57 மத வழிபாட்டுத்தலங்கள் காணப்படுவதோடு இப்பிரிவில் இந்துமதத்தைப் பின்பற்றும் மக்களே அதிகமாக காணப்படுகின்றனர். இப்பிரிவில் ஒரேயொரு வைத்தியசாலை மாத்திரம் மகிழடித்தீவு எனும் பிரதேசத்தில் அமைந்துள்ளது என்பதுடன் 5 சுகாதார மகப்பேற்றுபராமரிப்பு நிலையங்கள் அம்பிளாந்துறை, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு-தெற்கு, பனிச்சையடிமுன்மாரிமற்றும் கொல்லநுலை பிரதேசங்களில் அமையப்பெற்றுள்ளன.
| Name | From | To |
பிரிவுகள்
நிர்வாகப் பிரிவு
| குறிக்கோள் | உத்தியோகஸ்தர்களின் பூரண பங்களிப்புடன் அலுவலக கட்டமைப்பை வலுப்படுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
சமூகசேவைப் பிரிவு
| குறிக்கோள் | வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
திட்டமிடல் பிரிவு
| குறிக்கோள் | சிறப்பான திட்டமிடலின் மூலம் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
கணக்கியல் பிரிவு
| குறிக்கோள் | நிதி கணக்கியல் பதிவியல் நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்வதினூடே பிரதேச செயலகத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
பதிவாளர் பிரிவு
| குறிக்கோள் | பிரதேச பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஆவணப்படுத்தலும் தேவை ஏற்படும்பொழுது அவற்றை வழங்குதலும். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
ஓய்வூதிய பிரிவு
| குறிக்கோள் | அரசசேவையில் அர்பணிப்புடன் செயலாற்றிய உத்தியோகஸ்தர்களுக்கோ அவர் சார்ந்த அவரது மனைவிக்கோ, அன்றி அவரைச் சார்ந்து வாழ்பவருக்கோ பிரதேச ரீதியாக சிறப்பான ஓய்வூதியம் வழங்கி அவர்களது நலன்களை பாதுகாத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|

























