පුවත්
உலக கவிதை தினத்தினை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கலாசார பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிக்கூடல் 2025 நிகழ்வானது 2025.03.21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இன்று மு.ப 9.55 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச கலைஞர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பான கவித்துளிகள் வடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் 2025.09.03 ஆம் திகதி புதன்கிழமையன்று மு.ப 9.30 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் நடாத்திய பௌர்ணமி கலைவிழா நிகழ்வு 2025.03.13 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 5.30 மணிக்கு மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கிணைவாக Seiri வாரத்தினை முன்னிட்டு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிரமதான பணி 2025.09.02 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று மு.ப 8.00 மணி முதல் இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சிரமதானத்தின் போது பிரதேச செயலக வளாகம் மற்றும் பிரதேச செயலகத்திற்கு முற்புறமாகவுள்ள வீதியோரங்கள் என்பன பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க உறுப்பினர்களின் பூரண பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய பிரதேச தொழிற்சந்தை நிகழ்வு 2025.03.06 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மு.ப 9.00 மணிக்கு மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















