Doc1

சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பெண் தொழில் முயற்சியாளர்களின் விற்பனைகளை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

275555142 651255975954209 3098386586630284329 n

 

 

 

 

275436569 651259299287210 20044983525603102 n

 

 

275435667 651258389287301 7040609668633836269 n

111111

 

 

 

 

மாவட்டத்தில் உயிரோட்டமுள்ள பிரதேச செயலகமாக மண்முனை தென்மேற்கு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் உயிரோட்டமுள்ள பிரதேசசெயலகமாகவுள்ளது. வழங்கப்படுகின்ற திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துகின்ற பிரதேசசெயலகமாகவும் இது உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச பண்பாட்டு நிகழ்வும் இலக்கிய விழாவும் வெள்ளிக்கிழமை(28) கொக்கட்டிச்சோலை பண்பாடு மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைக்குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்க அதிபர் உரையாற்றுகையில்,

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் கலைகளை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. பாதுகாக்கவேண்டியே உள்ளது. இப்பிரதேசத்திலேயே பண்பாட்டு கலைகள் பலவும் வருடாந்தம் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. கலைஞர்களுக்கு எம்மால் கொடுக்கக்கூடிய வெகுமதிகள் பாராட்டுக்களும், கௌரவிப்புக்களும் மாத்திரமே. அவ்வாறான வெகுமதிகளின் ஊடாக கலைஞர்கள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புக்களையும் வழங்க வேண்டும். அவ்வாய்ப்புக்கள் இப்பிரதேசத்து கலைஞர்களுக்கு கிடைத்திருக்கின்றது. கலைகளின் ஊடாகவே பல்வேறு விடயங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றன. இப்பிரதேசத்திலேயே படைப்பாளிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், நாட்டு வைத்தியர்கள், கல்விமான்கள், வீரவீராங்கணைகள், சிறந்த சிந்தனையாளர்கள், முயற்சியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான வாய்ப்புக்களை வழங்குகின்ற போது, இப்பிரதேசத்து மக்கள் அவர்களாகவே அபிவிருத்திகளை செய்துகொள்வர்.

கூத்துக்கலையில் ஆர்வமுள்ள பல செயற்பாட்டாளர்கள் இப்பிரதேசத்திலே உள்ளனர். இன்றும் வட்டக்களரியில் கூத்தினை ஆடி அரங்கேற்றி வருகின்றனர். கலைகள் எப்போதும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது. அம்மகிழ்ச்சினையை கொடுக்கின்ற பிரதேசமாக மட்டக்களப்பின் மேற்குகரை இருந்து வருகின்றது. இங்கு வாழ்கின்ற மக்கள் நிறைவான மனம் கொண்டவர்கள். இதனால் எப்போதும் வருகின்றபோதும், அனைவருக்கும் உணவளித்து அனுப்புகின்ற பண்பாடு இன்றும் இவர்களிடத்திலே காணப்படுகின்றது. கலையினையும் தொழில்துறையாக மாற்றுகின்ற போது, கலைஞர்களது வீட்டில் வறுமை கொள்ளாது. பல நாடுகளில் தமது நாட்டுக்கலைகளை சுற்றுலாவிற்கு வருகின்ற பயணிகளிடம் காண்பித்து அதன்மூலமாக வருமானத்தினை ஈட்டிக்கொள்கின்றனர். ஆனால் நமது மாவட்டத்தில் அவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவதில்லை என குறிப்பிடப்பட்டது.

20181126 1618l35
மண்முனைதென்மேற்கு பிரதேச மீனவர்களுக்கு தோணிகள் வழங்கி வைப்பு.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மீனவர்களுக்கு  26.11.208 திங்கட்கிழமை தோணிகள் வழங்கி வைக்கப்பட்டன. மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் நிதியொதுக்கீட்டின் 12பேருக்கான தோணிகளே இன்று வழங்கி வைக்கப்பட்டன. இதனை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஸ், செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் வழங்கி வைத்தனர்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் இத்தோணிகள் வழங்கி வைக்கப்பட்டன பிரதேசத்திற்குட்பட்ட 25மீனவர்களுக்கு குறித்த தோணிகள் வழங்கப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக 12மீனவர்களுக்கு இன்றைய தினம் தோணிகள் வழங்கிவைக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட நிலையிலும், வாவிகளில் மீன்பிடிப்பதற்கு தோணிகள் இன்றி சிரமங்களை எதிர்கொண்ட மீனவர்களுக்கே தோணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

20181126 162009

2018h1126 162045

201811h26 162119

20181126 1622g00

20181126 153007 
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அருகிவரும் பாரம்பரிய 
போசாக்கு உணவுக்கண்காட்சி 26.11.2018 திங்கட்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

பல்துறைசார் போசாக்கு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற தானியங்கள், இலைவகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட 150க்கு மேற்பட்ட உணவுப்பண்டங்கள் இதன்போது கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற, இக்கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் வைபவரீதியாக திறந்து வைத்து பார்வையிட்டார்.

வேள்ட்விஸன் நிறுவனத்தின் அனுசரணையுடன், அன்னையர் குழுவினரால், குறித்த உணவுப்பண்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. ஒரு தானியத்தினைப் பயன்படுத்தியே 10க்கு மேற்பட்ட உணவுப்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போசாக்கு குறைவான பிள்ளைகளின் போசாக்கினை அதிகரிப்பதற்காக பிள்ளைகளுக்கு வழங்கவேண்டிய உணவு, அதன் அளவு தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், அதுதொடர்பிலான பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நிகழ்வில் பிரதேசத்தினைச்சேர்ந்த பெண்கள் பலர் கலந்துகொண்டிருந்தமையுடன், பாடசாலை மாணவர்களும் பங்கேற்றிருந்தனர். கலந்துகொண்டிருந்த அனைவருக்கும் உள்ளுர் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சியும் வழங்கப்பட்டது. மேலும், கலாசார மண்டப வளாகம் அமைந்துள்ள பகுதியில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

20181126 153141

20181126 151715

20181126 153141

20181126 151653

 

 

 

 

 

 

 

News & Events

14
මැයි2026
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது...

17
අප්‍රේ2026
"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வத்ஸர பியவர" வேலைத்திட்டத்திற்கு அமைவாக...

පුරවැසි ප්‍රඥප්තිය

Scroll To Top