செய்திகள்
பொருளாதார தொகைமதிப்பு 2025/26 விவசாய நடவடிக்கைகளுக்கான தொகைமதிப்பு எண்ணீட்டாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 2025.11.18 மற்றும் 2025.11.19 ஆகிய இரு தினங்களில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிர்வாக உத்தியோகத்தர் அவர்களின் தலைமையில் ஆரம்பமான முதல்நாள் பயிற்சி வகுப்பில் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் திரு.T.ஜெய்த்தனன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் வளவாளர்களாக புள்ளிவிபர உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குரிய அஸ்வெசும எண்ணீட்டு உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு 2026.01.26 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 12.30 மணிக்கு பிரதேச செயலாளர் திரு. S. சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ரீதியாக எண்ணீட்டாளர்களான கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களினால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு 2026.02.04 ஆம் திகதி புதன்கிழமை இன்று மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திரு. S. சுதாகர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகமும் முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலை பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயமும் இணைந்து நடாத்திய பிரதேச பொங்கல் விழா நிகழ்வானது 2026.02.03 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று ஆலய முன்றலில் பிரதேச செயலாளர் திரு. S. சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலை பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் அக்கிராம ஏனைய ஆலய பரிபாலன சபையினர், 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தலைவர் (வண்ணக்கர்), பாடசாலை இனியம் குழு, கிராம மட்டக் கலைஞர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகம், முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலை பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான கிராம அபிவிருத்தி சங்கங்களும் இணைந்து 27 வகையான பொங்கல்கள் பொங்கப்பட்டதுடன் பல்வேறு வகையான கலைநிகழ்வுகள், விஷேட பூசை இடம்பெற்றதுடன் அன்னதான நிகழ்வுடன் பொங்கல் விழா நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.






IOM நிறுவனத்தின் அனுசரணையுடன் எதிர்வரும் 2026.02.05 மற்றும் 2026.02.06 ஆகிய இரு தினங்களில் மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள பிரதேச செயலக மட்ட விளையாட்டு கழக பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மட்/மமே/ அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் கலந்து கொள்ளவுள்ளது. எனவே, இதற்கான ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.














