தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் எனும் நோக்கத்துடனான சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம அங்குரார்ப்பண வைபவம் 2026.03.16 ஆம் திகதி திங்கட்கிழமையன்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளர் திரு.S.சுதாகர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு.E.திரேசகுமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு.S.பார்த்தீபன், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம குழுத் தலைவர், உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இத்திட்டமானது கிராம மக்களின் உற்பத்தித்திறனை உயர்வடையச் செய்து நிலையான அபிவிருத்தியையும் வளமான சமூகத்தையும் உருவாக்கும் மிகமுக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

















