மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 2026.05.13 ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ கந்தசாமி பிரபு அவர்களது தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேசத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















